» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:47:21 AM (IST)



ராதாபுரம் கணபதி நகர்  பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த  கொம்பேறி மூக்கன் பாம்பை  தீயணைப்பு வீரர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு பிடித்தனர். 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள கணபதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கன். இவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் குழந்தைகளோடு படுத்து இருக்கும் போது பீரோவிற்கு அடியில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்துள்ளார். உடனே இது குறித்து ராதாபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பெயரில் வந்த தீயணைப்பு வீரர்கள் வீடு முழுவதும் தேடினர். 

இறுதியில் பீரோவுக்கு அடியில் சிக்கி இருந்த கொம்பேறி மூக்கனை பிடிக்க முயற்சித்த போது அது மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்றது. சாமர்த்தியமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் இடுக்கி மூலம் கிடுக்கிப்பிடி போட்டு பிடித்தனர். பின்பு பாம்பை பத்திரமாக மீட்டு பையில் போட்டு கொண்டு சென்றனர். இதில் ராதாபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வராஜன், தீயணைப்பு வீரர் கண்ணன் உட்பட தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். வீட்டில் இருந்த பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் நன்றியை தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory