» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம்தீர்ப்பு

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:18:18 AM (IST)

ராதாபுரம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூத்தன்குழி சுனாமி காலனியை சேர்ந்தவர் சிலுவை கித்தேரியான். இவரது மனைவி அந்தோணி வளன்அரசி. இந்த தம்பதியின் மகன் சிலுவை அன்றோ அபினேஷ் (20). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது கூத்தன்குழி மேற்கு தெருவை சேர்ந்த சாந்தகுரு மகன் சந்துரு (23), பாத்திமாநகரை சேர்ந்த ஜான்சன் மகன் ரேவந்த் (27), ஜெய ஆரோக்கியசெல்வம் மகன் பிரதீஷ் (23), சந்தியா மகன் நிக்கோலஸ் (23), அந்தோணிராஜ் மகன் டென்னிஸ் (29) ஆகியோர் சிலுவை அன்றோ அபினேசை வழிமறித்து தகராறு செய்தனர்.

அதன்பின்னர் சில நாட்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் சிலுவை அன்றோ அபினேஷ் வீட்டுக்கு சென்று அவரை தாக்கியுள்ளனர். இதனால் அவரது தாய் அந்தோணி வளன்அரசி கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த சந்துரு, ரேவந்த், பிரதீஷ், நிக்கோலஸ், டென்னிஸ் மற்றும் சிறுவன் உள்பட 8 பேர் கடந்த 28.8.2021 அன்று சிலுவை அன்றோ அபினேசை ஓட ஓட விரட்டிச்சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து சிறுவன் உள்பட 8 பேர் மீது கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி கதிரவன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் குற்றம் சாட்டப்பட்ட சந்துரு, ரேவந்த், பிரதீஷ், நிக்கோலஸ், டென்னிஸ் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

அவர்களுடன் குற்றம் சாட்டப்பட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு நபர் சிறுவன் என்பதால் அவருக்கான வழக்கு விசாரணை தனியாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் காளிமுத்து ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory