» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் : தேர்தல் நடைமுறைகளை உறுதி செய்ய உத்தரவு
புதன் 8, ஏப்ரல் 2026 5:49:25 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-யை முன்னிட்டு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட 358 நுண்பார்வையாளர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பிற்குத் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ரிஷிகேஷ் பாஸ்கர் யசோத் மற்றும் அனுபா ஸ்ரீ வஸ்தவா ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. சுகுமார் தலைமை தாங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 1,678 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் நுண்பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்:
திருநெல்வேலி: 97 வாக்குச்சாவடிகள்
பாளையங்கோட்டை: 123 வாக்குச்சாவடிகள்
நாங்குநேரி: 31 வாக்குச்சாவடிகள்
அம்பாசமுத்திரம்: 29 வாக்குச்சாவடிகள்
இராதாபுரம்: 18 வாக்குச்சாவடிகள்
மொத்தம் 298 பதற்றமான வாக்குச்சாவடிகளில் தலா ஒரு நுண்பார்வையாளர் மற்றும் 20 சதவீதக் கூடுதல் நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 358 பேர் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சியின் போது நுண்பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்: மாதிரி வாக்குப்பதிவு சரியாக நடைபெறுவதைக் கண்காணித்தல், வாக்குப்பதிவு தொடக்கம் மற்றும் நிறைவு நேரங்களைப் பதிவு செய்தல், இணையக் கண்காணிப்பு வசதிகளை உறுதி செய்தல்.
தபால் வாக்குப்பதிவு: ஏப்ரல் 12, 13, 14 ஆகிய தேதிகளில் 85 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று தபால் வாக்குப்பதிவு நடைபெறும் நிகழ்வுகளைக் கண்காணித்தல்.
வாக்கு எண்ணிக்கை (04.05.2026): வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்து, தேர்தல் பார்வையாளர்களுக்குத் துணையாகப் பணியாற்றுதல்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குப்பதிவு மையத்தின் செயல்பாடுகளைத் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. துரை, ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் மகாலெட்சுமி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் சந்திரசேகர், மாரிச் செல்வி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணியன், முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன் மற்றும் தேர்தல் பணி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு விநியோகிக்க ரூ.200 கோடி பதுக்கலா? நெல்லையில் அதிகாரிகள் அதிரடி சோதனை!
புதன் 8, ஏப்ரல் 2026 5:20:34 PM (IST)

சட்டத்தைக் கையில் எடுத்த உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை: சரத்குமார் வலியுறுத்தல்!
புதன் 8, ஏப்ரல் 2026 4:56:41 PM (IST)

மக்கள் பணத்தைத் தொட வேண்டிய அவசியம் எனக்கில்லை: நெல்லையில் விஜய் பிரச்சாரம்!
புதன் 8, ஏப்ரல் 2026 3:46:25 PM (IST)

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
புதன் 8, ஏப்ரல் 2026 3:38:44 PM (IST)

போலீசாரைத் தாக்க முயன்றதாக வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு: எஸ்.ஐ., மண்டை உடைந்தது!
புதன் 8, ஏப்ரல் 2026 8:38:27 AM (IST)

எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
புதன் 8, ஏப்ரல் 2026 8:23:51 AM (IST)

