» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆலங்குளம் சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்!
செவ்வாய் 2, ஜூன் 2026 10:10:13 AM (IST)

ஆலங்குளம் நெட்டூர் பகுதியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நெட்டூர் பகுதியில் வசித்து வரும் இந்து தேவேந்திரகுலவேளாளர் வகுப்பை சேர்ந்த ராம்குமார் த/பெ.ராமையா என்பவரை அதே பகுதியை சேர்ந்த பிற சமூகத்தினர் முன் விரோதம் காரணமாக வன்கொடுமை மேற்கொண்டதில் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
வன்கொடுமை சம்பவம் குறித்து நேற்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் ஆதிதிராவிடத்துறை அலுவலர்கள் அனைவரிடமும் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட ராம்குமார் என்பவர் மற்றும் சம்பவத்தில் காயமடைந்த ராயப்பன், மார்க் ரமேஷ், அருள்மாறன் ஆகியோர்களை நேரில் சந்தித்து, அன்னாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெறிவித்தார்கள். ஆதிதிராவிட நலத்துறை மூலம் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீருதுதவி முதல் தவணை தொகையாக ராம் குமார் அவர்களுக்கு ரூ.1.30 இலட்சத்திற்கான காசோலையினை அன்னாரிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது- இந்நிகழ்வில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் அறிவுறுத்தல்படி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் வலி எங்களுக்கு தெரியும். இனி இது போன்ற சம்பவம் நடக்க கூடாது என்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே கடந்த காலத்தில் இது போன்ற சம்பவம் நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் நடந்துள்ளது. காவல்துறை மூலம் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களை நேரடியாக சந்தித்து பார்த்ததில் பல கோரிக்கைகள் வைக்கப்படுள்ளது. அதன் அடிப்படையில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வன்கொடுமை பகுதிகளாக இந்த மாவட்டங்களை அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்து அவசர நடவடிக்கைகள் எடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். சமூக நல்லினக்கத்தை கொண்டு வருவதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக நல்லிணக்கம், ஜாதி ரீதியான பிரச்சனைக்கு தனியாக காவல்துறை பிரிவு அமைக்கவும் ஜாதி பிரச்சனை இருக்கும் இடத்தில் டாஸ்மாக் கடைகள் அகற்றவும் நடவடிக்கைகள் எடுக்க தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதிபாலன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் அனிதா, திருநெல்வேலி கோட்டாட்சியர் பிரியா, பாளையங்கோட்டை வட்டாட்சியர் மாரிராஜா உட்பட பலர் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனிநபர் கடன், கல்விக் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் ஆனந்த் மோகன் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 5:46:43 PM (IST)

நெல்லையில் அண்ணாமலை இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்: பொதுமக்கள் ஆர்வம்!
திங்கள் 8, ஜூன் 2026 5:18:27 PM (IST)

கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக் கூடாது? உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
திங்கள் 8, ஜூன் 2026 4:16:17 PM (IST)

நெல்லை - தென்காசி வழித்தட எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 10:56:37 AM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை
திங்கள் 8, ஜூன் 2026 10:37:14 AM (IST)

நெல்லை அருகே இருதரப்பு மோதலில் பெண் உள்பட 6 பேருக்குச் சரமாரி அரிவாள் வெட்டு: 7 பேர் கைது!
திங்கள் 8, ஜூன் 2026 8:57:56 AM (IST)


