» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மேலும் 3 புதிய சுங்கச்சாவடிகள்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு

வியாழன் 5, செப்டம்பர் 2024 12:42:43 PM (IST)

தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க உள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளது.

கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர ரூ.55 முதல் ரூ.370 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வர ரூ.85 முதல் ரூ.555 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நங்கிளி கொண்டான், நாகம்பட்டி சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.60 முதல் ரூ.400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory