» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: சவரன் ரூ.74,320க்கு விற்பனை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 10:47:50 AM (IST)
தங்கம் விலை கடந்த 3 நாட்களுக்கு பின்னர் வரலாறு காணாத வகையில் உயர்ந்து சவரன் ரூ.74,320க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை கடந்த 9-ந்தேதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த 9-ந்தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 410-க்கும், ஒரு பவுன் ரூ.67 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, 10-ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த 18-ந் தேதி ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.8 ஆயிரத்து 945 எனவும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.71 ஆயிரத்து 560 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின்னர், கடந்த 3 நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இந்த சூழலில், 3 நாட்களுக்கு பின்னர் நேற்று தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்தையும், பவுன் ரூ.72 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்படி, நேற்று தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு கிராம் ரூ.70 அதிகரித்து ரூ.9 ஆயிரத்து 15-க்கும், ஒரு பவுன் ரூ.560 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (22-04-2025) தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,200 உயர்ந்து சவரன் ரூ.74,320க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.275 உயர்ந்து ரூ.9,290க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரும் 30-ந் தேதி அட்சய திருதியை வருவதை ஒட்டி, பொதுமக்கள் ஒரு கிராம் தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் தற்போதைய தங்கம் விலை ஏற்றம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் சமீபகாலமாக தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருவதும், அமெரிக்கா-சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போரும் தங்கம் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)


