» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவைகுண்டம் பகுதிகளில் ரூ.4.16 கோடி செலவில் வளர்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு!

வெள்ளி 2, மே 2025 5:26:56 PM (IST)


திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.4.16 கோடி செலவில் நடைபெற்று வரும் 15 வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்  இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். 

அந்த வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், 15வது நிதிக்குழு மானியம் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம், குழந்தைகளுக்கான நட்பு பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் கீழ், குடிநீர் திட்டப்பணிகள், வளர்ச்சித்திட்டப்பணிகள் மற்றும் உட்கட்டமைப்புப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

அதனடிப்படையில் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பணிச்செட்டிக்குளம் ஊராட்சியில் மாவட்ட பொது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.6.75 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டப்பணியையும், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டுவரும் பணிகளையும், வலசக்காரன்விளை கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.3.50 இலட்சம் செலவில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டு நடைபெற்றுவரும் கட்டுமானப்பணியையும், 

சிறுத்தொண்டநல்லூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2.40 இலட்சம் செலவில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டு நடைபெற்றுவரும் கட்டுமானப்பணியையும், ஆறுமுகமங்களம் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.3.50 இலட்சம் செலவில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டு நடைபெற்றுவரும் கட்டுமானப்பணியையும், 

சிறுத்தொண்டநல்லூர் அருள்மிகு முத்துமாலைஅம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 15 வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.6.16 இலட்சம் செலவில் நடைபெற்று வரும் சமுதாய சுகாதார வளாகக் கட்டுமானப்பணியையும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.10 இலட்சம் செலவில் நடைபெற்றுவரும் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியையும், சிறுத்தொண்டநல்லூர் ஊராட்சியில் ரூ.1.15 இலட்சம் செலவில் நடைபெற்றுவரும் பம்ப் அறை கட்டுமானப்பணியையும், 

ஆறுமுகமங்களம் ஊராட்சியில் ஆறுமுகமங்களம் கண்மாய்க்கு செல்லும் வரத்துக்கால்வாயின் குறுக்கே ஆறுமுகமங்களம் முதல் சண்முகாபுரம் சாலையில் நபார்டு (மாநிலம்) நிதித்திட்டத்தின்கீழ் ரூ.3.36 கோடி செலவில் 30.30 மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியையும், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் கடையனோடை ஊராட்சியில்  கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிக்கு தலா ரூ.3.50 இலட்சம் செலவில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டு நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகளையும், 

தென் கடையனோடை கிராமத்தில்  கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.3.50 இலட்சம் செலவில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டு நடைபெற்றுவரும் கட்டுமானப்பணியையும், கடையனோடை ஊராட்சியில்  15 வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.1,77,952 செலவில் நடைபெற்றுவரும் போர்வெல் அமைத்து மோட்டார் அறையின் கட்டுமானப்பணிகளையும், பால்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கான நட்பு பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.33 இலட்சம் செலவில் நடைபெற்றுவரும் பள்ளி வகுப்பறைக் கட்டுமானப்பணிகளையும், 

பள்ளி சீரமைப்புத் திட்டத்தின்கீழ் ரூ.1 இலட்சம் செலவில் பழுதுநீக்கம் செய்யப்பட்டுள்ள கழிப்பறை வளாகப்பணிகளையும் என மொத்தம் ரூ.4.16 கோடி செலவில் நடைபெற்றுவரும் 15 வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்   நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி ஆர். ஐஸ்வர்யா,  உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  சாந்தி, உதவி செயற்பொறியாளர்  வள்ளி, திருவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னத்துரை, கிறிஸ்டோபர் தாசன், ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, சிவராஜன் மற்றும் உதவிப் பொறியாளர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory