» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் : 13 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு

ஞாயிறு 4, மே 2025 9:24:38 AM (IST)

நெல்லை சரகத்தில் ஒரே நாளில் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். 13 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக நெல்லை சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் "விருதுநகர் மேற்கு குற்றப்பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் தக்கலை மதுவிலக்கு பிரிவுக்கும், ராமநாதபுரம் மாவட்டம் சத்திரகுடி இன்ஸ்பெக்டர் மணியன் புளியம்பட்டிக்கும், தேனி உத்தமபாளையம் சுரேஷ்குமார் கடையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

பரமக்குடி காளிராஜன் ஊத்துமலைக்கும், மேலப்பாளையம் ராஜேஷ் தென்காசி ஏ.சி.டி.யு.க்கும், தச்சநல்லூர் முத்துகணேஷ் குற்றாலத்துக்கும், நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு விஜி தென்காசி ஐ.யு.சி.ஏ.டபிள்யு. பிரிவுக்கும், நெல்லை மாநகர ஜே.ஏ.பி.யு ஜெயலட்சுமி நெல்லை மாவட்ட ஏ.சி.டி.யு. பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி

வள்ளியூர் கவுரி மனோகரி மணியாச்சிக்கும், ஆலங்குளம் லட்சுமி பிரபா மாசார்பட்டிக்கும், ஏர்வாடி சுதா சிவந்திபட்டிக்கும், அங்கிருந்த ராஜகுமாரி ஏர்வாடிக்கும், குற்றாலம் மனோகரன் சங்கரன்கோவில் தாலுகாவுக்கும், ஊத்துமலை வனசுந்தர் நாசரேத்துக்கும், சுத்தமல்லி சோனமுத்து உவரிக்கும், தாளமுத்துநகர் ஜெயந்தி தூத்துக்குடி தெற்கு குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கன்னியாகுமரி சாந்தகுமாரி, குமரி மாவட்ட ஏ.சி.டி.யு. பிரிவுக்கும், கருங்கல் தங்கராஜ் ஆறுமுகநேரிக்கும், புளியங்குடி அனைத்து மகளிர் சாந்தி வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், தென்காசி மதுவிலக்கு கபீர்தாசன் தூத்துக்குடி மதுவிலக்கிற்கும், நாகர்கோவில் மதுவிலக்கு பிரவீனா விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு 

மேலும் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மாரிசெல்வி புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், ஸ்டீபன் சாத்தான்குளத்துக்கும், கமலாதேவி சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், கற்பகவள்ளி ஸ்ரீவைகுண்டம் குற்றப்பிரிவுக்கும், பாத்திமா பர்வீன் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சாந்தி அருமணைக்கும், சந்திரமூர்த்தி சுத்தமல்லிக்கும், அருளப்பன் தாளமுத்துநகருக்கும், வேல்ராஜ் முன்னீர்பள்ளத்திற்கும், முத்துகுமரன் சுசீந்திரத்திற்கும், சுரேஷ்குமார் நாங்குநேரிக்கும், சிவராமகிருஷ்ணன் செங்கோட்டைக்கும், சத்யபாமா கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory