» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காரியாப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி - 3பேர் படுகாயம்!
புதன் 11, ஜூன் 2025 11:16:38 AM (IST)
காரியாப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே வடகரையில் ராஜா சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பட்டாசு ஆலையில் இன்று தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசு தாயாரித்துக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வெடி விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் ரூ.1.5 லட்சம் மோசடி- வாலிபர் கைது!
புதன் 18, ஜூன் 2025 10:05:34 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 18, ஜூன் 2025 5:15:21 PM (IST)

தங்கம் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் : விஸ்வகர்மா சங்கம் தீர்மானம்
புதன் 18, ஜூன் 2025 4:15:08 PM (IST)

நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவிட 50% மானியம் : விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 18, ஜூன் 2025 4:05:13 PM (IST)

மின்கம்பம் மாற்றும் பணிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் : மின்வாரிய அதிகாரி கைது!
புதன் 18, ஜூன் 2025 3:28:19 PM (IST)

பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றம் : திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
புதன் 18, ஜூன் 2025 11:32:12 AM (IST)
