» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.120.53 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் தொடக்கம்
வியாழன் 12, ஜூன் 2025 8:12:36 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.120.53 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.120.53 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, மாநகராட்சி 3ஆவது வார்டு கேடிசி நகர் கழிவு நீர் உந்தும நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கோட்டாட்சியர் பிரபு தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.சி.சண்முகையா எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆணையர் மதுபாலன் வரவேற்றார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் வெங்கடேஷ் திட்ட விளக்கவுரையாற்றினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் சுரேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, சுப்புலட்சுமி, வைதேகி, நாகேஸ்வரி, ஜெயசீலி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்ஷலி உள்பட பலர் பங்கேற்றனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)


