» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேருந்தில் பயணகளிடம் திருடிய 2 பெண்கள் உட்பட 3பேர் கைது: 27 பவுன் மீட்பு!
திங்கள் 16, ஜூன் 2025 12:12:33 PM (IST)
குமரி மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் வயதான பெண்களை குறி வைத்து திருடிய 2 பெண்கள் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையிலான போலீசார் கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து பல வருடமாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேலகாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விஜயா, மஞ்சு, அரவிந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.இவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் வயதான பெண்களை குறி வைத்து பர்ஸ், செயின் ஆகியவைகளை திருடி வந்தது தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து 27 சவரன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் போக்சோ குறித்து விழிப்புணர்வு செய்ய தனி காவலர்களை நியமித்தது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)


