» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு
திங்கள் 16, ஜூன் 2025 4:56:01 PM (IST)
ஆவினில் கால்நடை உதவி மருத்துவர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கன்னியாகுமரி ஆவின் பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) 50 பிரதம சங்கங்களின் மூலம் தினமும் சராசரியாக 8500 லிட்டர் பால் கொள்முதல் செய்து பால் உற்பத்தியாளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்யப்படுகிறது.
தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு மருத்துவ சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒன்றிய பணிநிலைத்திறனில் ஒப்பந்த அடிப்படையிலான ஒதுக்கீடு செய்யப்பட்டு காலியாக உள்ள 1 கால்நடை உதவி மருத்துவர் பணியிடத்தினை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள 50 வயதுக்குட்பட்ட சொந்தமாக இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடனும் வரும் 25.06.2025 அன்று காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், லிட்., நாகர்கோவில் என்ற முகவரியில் நடைபெறும் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் ரூ.1.5 லட்சம் மோசடி- வாலிபர் கைது!
புதன் 18, ஜூன் 2025 10:05:34 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 18, ஜூன் 2025 5:15:21 PM (IST)

தங்கம் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் : விஸ்வகர்மா சங்கம் தீர்மானம்
புதன் 18, ஜூன் 2025 4:15:08 PM (IST)

நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவிட 50% மானியம் : விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 18, ஜூன் 2025 4:05:13 PM (IST)

மின்கம்பம் மாற்றும் பணிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் : மின்வாரிய அதிகாரி கைது!
புதன் 18, ஜூன் 2025 3:28:19 PM (IST)

பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றம் : திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
புதன் 18, ஜூன் 2025 11:32:12 AM (IST)
