» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரி கடல் அலையின் சீற்றத்தால் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:09:27 AM (IST)
கன்னியாகுமரியில் கடல் சீற்றமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். வார விடுமுறையை முன்னிட்டு அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பாக திரண்டனர்.
ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் சரியாக தெரியவில்லை. இதனால் அங்கு திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட சென்றனர். ஆனால் கடல் சீற்றம் ஆக்ரோஷமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், யாரும் அந்த பகுதியில் கடலில் இறங்காமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அங்கு புனித நீராட வந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட படகு போக்குவரத்து நடந்தது. காலை 8 மணிக்கு படகு சேவை தொடங்கியதும் உற்சாகத்துடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம், கண்ணாடி நடைபாலம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.
இதுபோல் கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன் கண்காட்சி சாலை என அனைத்து பகுதிகளிலும் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
செவ்வாய் 1, ஜூலை 2025 10:58:04 AM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

லாக் அப் மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : விஜய் வலியுறுத்தல்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:37:21 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

கோயில் காவலர் அஜித்குமாரை தாக்கியது ஏன்? காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
திங்கள் 30, ஜூன் 2025 5:21:08 PM (IST)

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவியேற்பு
திங்கள் 30, ஜூன் 2025 5:11:50 PM (IST)
