» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை: தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

செவ்வாய் 8, ஜூலை 2025 4:11:52 PM (IST)

நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. வங்கித் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தியும்  நாளை ஜூலை 9-ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பள நிறுத்தம், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory