» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடலூர் ரயில் விபத்துக்கு மாவட்ட ஆட்சியரே காரணமா? தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு

செவ்வாய் 8, ஜூலை 2025 4:46:14 PM (IST)

லெவல் கிராசிங்கிற்கு சுரங்க பாதை அமைக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் கடந்த ஓராண்டாக அனுமதி அளிக்கவில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

கடலூரில் செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது.

இந்நிலையில், பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி ரயில் சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பள்ளி மாணவ மாணவிகள் 3 பேர் பலியாகி உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விபத்துபற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ரயில்வேயின் முழு நிதியுதவியுடன் இந்த லெவல் கிராசிங்கிற்கு சுரங்க பாதை (அடிச்சாலை) அமைக்க தெற்கு ரயில்வே முன்பே ஒப்புதல் அளித்து விட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக இதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்து உள்ளது.

இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த நபர்களுக்காக ரயில்வே ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்வதுடன், இதற்காக மன்னிப்பும் கோருகிறது என தெரிவித்து உள்ளது.


மக்கள் கருத்து

முட்டாள்Jul 8, 2025 - 06:22:44 PM | Posted IP 162.1*****

அது இருக்கட்டும், கேட் கீப்பர் தான் திராவிட டாஸ்மாக் ல விற்கும் சத்து பானம் அருந்தி படுத்து விட்டார். என்னத்த சொல்ல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory