» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணம்!
வியாழன் 9, அக்டோபர் 2025 3:48:40 PM (IST)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாகவும் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்தார்
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி தனது வீட்டிற்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ1 குற்றவாளியாக நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்தனர். 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த செம்பியம் போலீசார் வழக்கின் குற்றப்பத்திரிகையை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். தற்போது, இந்த வழக்கை மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வருகிறார். இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த சூழலில் ஆயுள் தண்டனை கைதியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாகவும் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு, கல்லீரல் பாதிப்பால் உடல்நிலை மோசமானதை அடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் இன்று காலை உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வ.உ.சிதம்பரனாருக்கு பாராளுமன்றத்தில் சிலை நிறுவப்படும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:24:44 PM (IST)

கலவை எந்திரம் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 12:04:17 PM (IST)

புதுக்கோட்டை அருகே தனியார் பஸ்சில் ரூ.4½ கோடி உயர் ரக போதைப்பொருள் சிக்கியது!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:59:09 AM (IST)

பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகளில் ஒருவருக்கு அரசு வேலை: எ.வ.வேலு
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:45:33 AM (IST)

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம்: தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:24:55 AM (IST)

கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா தொடங்கியது: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:24:50 AM (IST)




