» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீதித்துறையில் 50 ஆண்டு சேவை: முன்னாள் நீதிபதி ஜோதிமணிக்கு சென்னை பார் கவுன்சில் பாராட்டு!

வியாழன் 27, நவம்பர் 2025 7:55:54 AM (IST)



தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல தற்போதைய நிர்வாகி மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி யின் 50 ஆண்டு சேவையை சென்னை பார் கவுன்சில் இன்று விருது வழங்கி பாராட்டியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ம் தேதி சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. இதை நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் சட்ட தின உறுதி மொழி வாசிக்கப்பட்டு உறுதி எடுக்கப்பட்டு வருகிறது.

இன்று சென்னை பார் கவுன்சில் சார்பில் நடைபெற்ற சட்ட தின விழாவில் முன்னாள் நீதிபதி டாக்டர் பி. ஜோதிமணி வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் நீதித்துறைக்கு 50 ஆண்டுகள் சிறப்பாக சேவை செய்ததை பாராட்டி இன்று சிறப்பு விருதை வழங்கி கௌரவித்தது. இந்த சிறப்பு விருதினை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணிக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory