» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!
வியாழன் 27, நவம்பர் 2025 10:37:40 AM (IST)
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
அதிமுகவில் இருந்த எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், 2026 தேர்தல் வெற்றிக்கு கட்சி ஒன்றிணைப்பை வலியுறுத்தி, அண்மையில் பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடுவை விதித்தார்.
அதிமுகவிலிருந்து ஏற்கெனவே பிரிந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் பசும்பொன்னில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். இதன் தொடர்ச்சியாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இந்தச் சூழலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன், நேற்று சென்னை தலைமைச் செயலகம் வந்தார். சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவுவை சந்தித்து, தனது எம்எல்ஏ பதவி ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்த நிலையில், இன்று சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்துக்கு வந்த செங்கோட்டையன், அங்கு அக்கட்சியின் தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். பின்னர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இந்நிலையில் செங்கோட்டையனுக்கு த.வெ.க.வில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 4 மாவட்டங்களுக்கு (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி) அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி: உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வியாழன் 27, நவம்பர் 2025 12:27:22 PM (IST)

செங்கோட்டையனை தவெகவிற்கு வரவேற்கிறேன்; வெற்றி நிச்சயம் : விஜய் பேச்சு!
வியாழன் 27, நவம்பர் 2025 11:45:14 AM (IST)

முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
வியாழன் 27, நவம்பர் 2025 11:28:07 AM (IST)

இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை!!
வியாழன் 27, நவம்பர் 2025 10:47:52 AM (IST)

தமிழகத்தில் அவசரகதியில் எஸ்ஐஆர் திட்டம்: விஜய்தரம்சிங் குற்றச்சாட்டு
வியாழன் 27, நவம்பர் 2025 10:15:06 AM (IST)

நீதித்துறையில் 50 ஆண்டு சேவை: முன்னாள் நீதிபதி ஜோதிமணிக்கு சென்னை பார் கவுன்சில் பாராட்டு!
வியாழன் 27, நவம்பர் 2025 7:55:54 AM (IST)




