» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

வியாழன் 27, நவம்பர் 2025 11:28:07 AM (IST)



முன்னாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூக நீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:

நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களது புகழ் ஓங்குக!

தமிழ்நாடும் தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு காட்டியவர்!

பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூக நீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர்!

தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது 2023-ம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங் அவர்களின் முழுவுருவச் சிலை!

EWS, NEET என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்.

சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்!. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory