» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமித்ஷா வருகைக்கு பின்பு தமிழகத்தில் பாஜக வெற்றி பெறப் போகிறது: தூத்துக்குடியில் தமிழிசை பேட்டி
வெள்ளி 2, ஜனவரி 2026 4:56:55 PM (IST)

அமித்ஷா தமிழகம் வருகைக்கு பின்பு அசுர சக்தியோட தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறப் போகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், "அழிவு பாதையை நோக்கி காங்கிரஸ் செல்கிறது என்று ஜோதிமணி கூறியிருப்பது திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஆரம்பமாகிவிட்டது. அவர் கூறிய கருத்து ஒப்புதல் வாக்குமூலம்.
போதையை ஒழிக்க வேண்டும் என்றால அறிவாலயத்தை நோக்கி தான் வைகோ பாதையாத்திரை செல்ல வேண்டும். தமிழகத்தில் 2026 மிகப்பெரிய மாற்றம் வரும். தமிழ்நாட்டின் கடன் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. ஒருவர் தலையில் ஒன்னே முக்கால் லட்சம் கடன் இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு மூன்று வருடமாகிறது. இன்னும் கொலையாளிகளை கண்டுபிடிக்கவில்லை.
போராட்டம் நிறைந்த தமிழகமாக உள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் எட்டாவது நாளாக போராடி வருகின்றனர். தென் பகுதியில் வஉசி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது காரணமாக அந்நிய முதலீடுகள் வந்துள்ளது தொழிற்சாலைகள் வருகின்றன இதற்கு காரணம் மோடி தான்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பாஜகவினரை பார்த்து சோறு தான் திங்குகீறீர்களா என்று கூறியுள்ளார்.. அமைச்சர் சேகர் பாபுவிற்கு எச்சரிக்கை,.. கோவில் உங்களுக்கு சொந்தமில்லை. 2026 நாங்கள் காத்திருக்கின்றோம். கோவில் வாசலில் நின்று எப்படி பேசலாம். யார் அதிகாரம் கொடுத்தது? சர்சு, மசூதி வாசல்களில் இவ்வாறு நிற்பீர்களா?
2026 தேர்தலில் இதற்கான விடையை பார்க்க தான் போகின்றீர்கள்.. திருச்செந்தூர் முருகன் கோவில் பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்க முடியவில்லை 2026 தேர்தலில் மாற்றம் ஏற்படும். அமித்ஷா தமிழகம் வர இருக்கின்றார்.. அதன் பின்பு சக்தியை நீங்கள் பார்க்க தான் போகின்றீர்கள். அசுர சக்தியோட தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறப் போகிறது.
அடிமை கூட்டணி என்று திமுக கூட்டணியினர் கூறுகின்றனர். ஆனால் அடித்து நொறுக்க கூடிய கூட்டணி. போதையே இல்லை என்று அப்பாவு கூறுகின்றார் அவர் வீட்டு முன்பு போய் பாருங்கள்.. முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் திராவிட மாடல் அரசு என்று கூறினார். பேட்டியின் போது பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தி.மு.க. ஆட்சியில்தான் கோவில் கும்பாபிஷேகம் அதிகளவில் நடத்தப்பட்டுள்ளது : சேகர்பாபு பெருமிதம்
வெள்ளி 2, ஜனவரி 2026 5:46:42 PM (IST)

தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.
வெள்ளி 2, ஜனவரி 2026 5:22:59 PM (IST)

வாய்க்காலில் வேன் கவிழ்ந்து விபத்து: ஐயப்ப பக்தர்கள் 13பேர் காயம்
வெள்ளி 2, ஜனவரி 2026 4:46:50 PM (IST)

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
வெள்ளி 2, ஜனவரி 2026 4:22:46 PM (IST)

குடும்ப பிரச்சனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: நாகர்கோவிலில் பரிதாபம்!
வெள்ளி 2, ஜனவரி 2026 4:09:08 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
வெள்ளி 2, ஜனவரி 2026 3:53:35 PM (IST)


