» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு : ஒரு கிலோ ரூ.1,600-க்கு விற்பனை!
ஞாயிறு 17, மே 2026 8:47:41 AM (IST)
தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்ந்தது. மீன்களுக்கு ஓரளவு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால், விசைப்படகு மீனவர்கள் யாரும் கடந்த சில வாரங்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்தனர்.
இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும், எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆழ்கடலுக்கு செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏற்கனவே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று காலையில் கரைக்கு திரும்பினர்.
குறைந்த அளவு மீனவர்களே வந்ததால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், அதுபோல் மாவட்டத்தில் பல இடங்களில் மீன் ஏலம் நடைபெறாததாலும், மீன்கள் வாங்க திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்தனர். இதனால் மீன்களின் விலை கடந்த வாரத்தை விட சற்று உயர்ந்து காணப்பட்டது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று சீலா மீன் ஒரு கிலோ ரூ.1,400 முதல் ரூ.1,600 வரையும், விளைமீன், ஊழி, பாறை ஆகிய மீன்கள் கிலோ ரூ.500 முதல் ரூ.700 வரையும், கேரை கிலோ ரூ.300 வரையும் நண்டு கிலோ ரூ.750 வரையும், சாளை மீன் மீன் ஒரு கூடை ரூ.2,000 முதல் ரூ.2,300 வரையும், வங்கனை மீன் ஒரு கூடை ரூ.2,000 வரையும் விற்பனையானது. சில்லறை கடைகளில் நேற்று சீலா மீன் கிலோ ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டது. மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையிலும் மீன்களுக்கு ஓரளவு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலன் கண்முன்னே கொடூரம்: கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு 30 ஆண்டுகள் சிறை!
ஞாயிறு 17, மே 2026 11:04:00 AM (IST)

மக்களின் தீர்ப்பை கொச்சைப்படுத்தக் கூடாது : ஸ்ரீநாத் எம்எல்ஏ பரபரப்பு அறிக்கை!
ஞாயிறு 17, மே 2026 9:58:14 AM (IST)

பிரபல வணிக நிறுவனங்களில் போலி ஆல் அவுட் திரவப் பாட்டில்கள் பறிமுதல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 17, மே 2026 8:05:01 AM (IST)

நாகர்கோவில் அருகே நகைக்கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது: மேலும் மூவருக்கு போலீஸ் வலைவீச்சு
சனி 16, மே 2026 9:02:22 PM (IST)

திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: திருச்செந்தூர் தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
சனி 16, மே 2026 8:00:33 PM (IST)

வீட்டின் பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர் கைது: சென்னையில் பரபரப்பு!
சனி 16, மே 2026 5:50:47 PM (IST)


