» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் கஞ்சா கடத்திய இளம்பெண் உள்பட 2பேர் கைது: 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!
வெள்ளி 12, ஜூன் 2026 8:28:33 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் 2 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற இளம்பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில மர்ம நபர்கள் வாகனங்கள் மூலமாக கஞ்சாவைக் கடத்தி வருவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், நேற்று ஏரல் வட்டாரக் காவல் எல்லைப் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தச் சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மற்றும் இளம்பெண்ணைப் போலீசார் தடுத்து நிறுத்தி முறைப்படி விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் கேள்விகளுக்கு அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இதில் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் மறைத்து வைத்திருந்த பையை அதிரடியாகச் சோதனை செய்தனர்.
அந்தச் சோதனையில், பையின் உள்ளே 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை உடனடியாகப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்கள் இருவரையும் காவல் எல்லைக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
போலிசார் நடத்திய தீவிர விசாரணையில், பிடிபட்ட இளம்பெண் ஏரல் அருகே உள்ள கோட்டூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் மகள் கனிட்டா (19) என்பதும், அவருடன் வந்த நபர் அவரது ஆண் நண்பரான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் மாதாங்கோயில் தெருவைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் பாலசுப்பிரமணியன் (19) என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் இருவரும் தூத்துக்குடி பகுதியில் இருந்து நெல்லைப் பகுதிக்குக் கஞ்சாவை நுகர்வோர் மற்றும் சட்டவிரோத விற்பனைக்காகக் கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதியின் உத்தரவின் பேரில் அவர்களைப் பாதுகாப்புடன் சிறையிலடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழா சிறப்பு மலர் : மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!
வெள்ளி 12, ஜூன் 2026 3:39:35 PM (IST)

கள் இறக்குமதிக்கு அனுமதி: உயர்நீதிமன்ற பரிந்துரையை அமல்படுத்த வழக்கறிஞர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
வெள்ளி 12, ஜூன் 2026 3:28:23 PM (IST)

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் : தூத்துக்குடி பொதுக்குழுவில் தீர்மானம்
வெள்ளி 12, ஜூன் 2026 3:16:03 PM (IST)

ஆசாரிபள்ளம் மருத்துவமனை சாலையில் ஆபத்தான பள்ளம்: போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 12:36:58 PM (IST)

கூட்டணி கட்சிகள் தேர்தலுக்குப் பின் தங்கள் நிறத்தை வெளிப்படுத்துகின்றன: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
வெள்ளி 12, ஜூன் 2026 12:23:57 PM (IST)

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 12:09:08 PM (IST)


