» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழா சிறப்பு மலர் : மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!
வெள்ளி 12, ஜூன் 2026 3:39:35 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழா நினைவு சிறப்பு மலரை முன்னாள் முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
தூத்துக்குடியில் 75 ஆண்டுகாலமாகக் கல்விச் சேவை ஆற்றி வரும் புகழ்பெற்ற வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நினைவுகளைப் பதிவு செய்யும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தத் தனித்துவமான "Memorabilia & VOCC Diary” என்னும் நினைவுப் புத்தகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல தலைமுறை மாணவ, மாணவியர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இக்கல்லூரி பெரும் ஊன்றுகோலாக இருந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பவள விழா நினைவுகளைத் தொகுத்து இந்தச் சிறப்பு டைரி மற்றும் நினைவுப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, முன்னாள் அமைச்சர் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கீதா ஜீவன், மற்றும் வ.உ.சிதம்பரம் கல்லூரி செயலர் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம், வ.உ.சிதம்பரம் கல்வியியல் கல்லூரி செயலர் ஏ.பி.சி.வி. சண்முகம், ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி செயலர் சுப்புலட்சுமி, வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் வீரபாகு, கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ரோஹித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பேராசிரியர்களான ராதிகா, மீனாட்சி சுந்தரம், பட்சிராஜன் மற்றும் ஜாக்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக அரசின் சாதனைகள் மீது சோஃபா மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:19:26 PM (IST)

திமுக தோல்விக்கு அமைச்சர்களும், அதிகாரிகளுமே காரணம்? மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:00:12 PM (IST)

கள் இறக்குமதிக்கு அனுமதி: உயர்நீதிமன்ற பரிந்துரையை அமல்படுத்த வழக்கறிஞர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
வெள்ளி 12, ஜூன் 2026 3:28:23 PM (IST)

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் : தூத்துக்குடி பொதுக்குழுவில் தீர்மானம்
வெள்ளி 12, ஜூன் 2026 3:16:03 PM (IST)

ஆசாரிபள்ளம் மருத்துவமனை சாலையில் ஆபத்தான பள்ளம்: போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 12:36:58 PM (IST)

கூட்டணி கட்சிகள் தேர்தலுக்குப் பின் தங்கள் நிறத்தை வெளிப்படுத்துகின்றன: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
வெள்ளி 12, ஜூன் 2026 12:23:57 PM (IST)


