» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் தொடரும் கஞ்சா வேட்டை: மேலும் 3 பேர் அதிரடி கைது - 6 கிலோ கஞ்சா பறிமுதல்!

வியாழன் 2, ஜூலை 2026 11:28:27 AM (IST)

தூத்துக்குடியில் நேற்று 6.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக, இன்று மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து மேலும் 6.100 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையப் பகுதியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 6.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தலில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

கைதான அந்த 6 பேரிடம் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், இக்கடத்தல் பின்னணியில் தொடர்புடைய மேலும் சில நபர்கள் குறித்த முக்கியத் தகவல்கள் போலீசாருக்குக் கிடைத்தன. அந்தத் தகவலின் அடிப்படையில், போலீசார் குறிப்பிட்ட மறைவிடங்களுக்குச் சென்று அதிரடிச் சோதனை நடத்தினர்.

அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மேலும் 3 பேரை போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், போல்பேட்டை, மகேஷ்குமார் மகன் மாதிபிரபாகரன் (26), கந்தசாமிபுரம், முருகேசன் மகன் முத்துமணிகண்டன் (30), மற்றும் முகமது சாலிபுரம், முருகன், மகன் சக்தி ஆனந்த் (31) ஆகிய 3பேரிடம் இருந்து மொத்தம் 6.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் அடுத்தடுத்த சோதனைகள் மூலம் இரு தினங்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சங்கிலித் தொடர் கடத்தலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory