» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்பா சென்டர் நடத்த ரூ.20,000 மாமூல் வாங்கிய 2 பெண் போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது!

வியாழன் 2, ஜூலை 2026 12:13:36 PM (IST)


சென்னையில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா சென்டர் நடத்துவதற்கு மாதாந்திர மாமூலாக ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் நிலைய பெண் அதிகாரிகள் இருவரைத் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஜெனிபர் (30) என்பவர் திருமுல்லைவாயில் சி.டி.எச். சாலை பகுதியில் அழகு நிலையம் மற்றும் 'ஸ்பா' (Spa) மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த ஜூன் 20-ஆம் தேதி, இச்சென்டரில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகக் கூறி, திருமுல்லைவாயில் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். பின்னர், அழகு நிலையத்தை மூடிவிட்டு காவல் நிலையம் வந்து பேசுமாறு கூறிச் சென்றுள்ளனர்.

மறுநாள் ஜெனிபர் காவல் நிலையம் சென்றபோது, ஸ்பா சென்டரைத் தொடர்ந்து நடத்த வேண்டுமானால் தங்களுக்கு மாதம் ரூ.50,000 மாமூல் தர வேண்டும் என்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அமுல் (வயது 50) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி (வயது 42) ஆகியோர் வற்புறுத்தியுள்ளனர்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெனிபர், இது குறித்துத் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ரகசியப் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின்படி, ஜெனிபர் பெண் அதிகாரிகளிடம் பேரம் பேசி, மாதாந்திர மாமூலாக ரூ.20,000 கொடுப்பதாக ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெனிபரிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று பிற்பகல் திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்குச் சென்ற ஜெனிபர், அங்கிருந்த சிறப்பு எஸ்.ஐ. அமுலிடம் லஞ்சப் பணத்தைக் கொடுத்துள்ளார். அவர் பணத்தைப் பெற்றபோது, அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அமுலை கையும் களவுமாகப் பிடித்தனர். 

மேலும், இந்த லஞ்சப் பேரத்திற்கு உடந்தையாகச் செயல்பட்ட எஸ்.ஐ. பாக்கியலட்சுமியையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். காவல் நிலையத்திற்குள்ளேயே பெண் அதிகாரிகள் இருவர் லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory