» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெக ஆட்சியைத் தரைமட்டமாக்க திமுக சதி : ஸ்டாலின் மீது சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!
வியாழன் 2, ஜூலை 2026 12:23:48 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைப் பண பலத்தால் கவிழ்க்க திமுக முயற்சி செய்து வருவதாகவும், "விரைவில் தேர்தல் வரும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வந்ததன் பின்னணியில் உள்ள ரகசியம் தற்போதுதான் தெரியவந்துள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வி.சண்முகம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், அண்மைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். டெல்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி நியமிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம் என்பது முழுமையாக முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு விஷயமாகும். டெல்லியில் தனக்கு நம்பிக்கையான ஒரு நபர் இருக்க வேண்டும் என்று கருதி முதலமைச்சர் இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார். இதில் விவாதிப்பதற்கோ அல்லது பெரிதுபடுத்துவதற்கோ எந்த விஷயமும் இல்லை" என்று தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரம் மற்றும் தவெக எம்.எல்.ஏ.-க்கள் பேரம் பேசப்படும் விவகாரம் குறித்துப் பேசிய சண்முகம், "கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் பொதுமக்கள் தவெக-விற்குப் பெருவாரியாக வாக்களித்தனர். ஆனால், தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாததை திமுகவினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே, கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பேசி தவெக எம்.எல்.ஏ.-க்களை விலைக்கு வாங்க திமுக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஜனநாயகப் படுகொலையான இத்தகைய குதிரை பேர நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று சாடினார்.
மேலும், "விரைவில் தேர்தல் வரும் என்று மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறி வந்ததன் உண்மையான பின்னணி இப்போதுதான் நமக்குத் தெரியவருகிறது. தவெக ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில்தான் அவர்கள் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள். இந்த குதிரை பேர விவகாரத்தின் பின்னணியில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டம் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பெ.சா. கருப்பண ராஜவேல் பொறுப்பேற்பு!
வியாழன் 2, ஜூலை 2026 12:34:29 PM (IST)

ஸ்பா சென்டர் நடத்த ரூ.20,000 மாமூல் வாங்கிய 2 பெண் போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது!
வியாழன் 2, ஜூலை 2026 12:13:36 PM (IST)

தூத்துக்குடியில் தொடரும் கஞ்சா வேட்டை: மேலும் 3 பேர் அதிரடி கைது - 6 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 2, ஜூலை 2026 11:28:27 AM (IST)

தமிழ்நாடு மாடல் வாஷிங் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்குமா? - கனிமொழி கேள்வி!
வியாழன் 2, ஜூலை 2026 11:01:55 AM (IST)

தவெக ஆட்சியைக் கவிழ்க்க மு.க.ஸ்டாலின் திட்டம்: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!
வியாழன் 2, ஜூலை 2026 10:48:41 AM (IST)

அனைத்து ரயில் நிலையங்களிலும் பாரத் டாக்ஸி சேவை : மத்திய அரசுக்கு கோரிக்கை
வியாழன் 2, ஜூலை 2026 7:52:29 AM (IST)


