» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!
புதன் 16, ஏப்ரல் 2025 12:36:11 PM (IST)

ஐ.பி.எல். தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்து கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 18வது லீக் தொடரின் 31வது போட்டி, முல்லன்பூரில் நேற்று நடந்தது. இதில், பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப், பேட்டிங்கை தேர்வு செய்தது. பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு, 39 ரன் சேர்த்த நிலையில், பிரியன்ஷ் ஆர்யா 22 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 2 பந்துகள் ஆடிய ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 2 ரன்னில் நடையை கட்டினார். மறு முனையில் நிதானமாக ஆடிக் கொண்டிருந்த பிரப்சிம்ரன் சிங்கும் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த நேஹால் வதேரா 10 ரன், கிளென் மேக்ஸ்வெல் 7 ரன், சூர்யன்ஷ் ஷெட்கே 4 ரன், மார்கோ ஜேன்சன் (1 ரன்) அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், பஞ்சாப் அணி, 10.1 ஓவரிலேயே, 8 விக்கெட் இழப்புக்கு 86 ரன் மட்டுமே எடுத்து தடுமாறியது. ஷசாங்க் சிங், சேவியர் பார்ல்லெட் தட்டுத் தடுமாறி, அணியை 100 ரன்களை கடக்கச் செய்த நிலையில், ஷசாங்க் சிங் 18 ரன்னில் வெளியேறினார். சேவியரும் 11 ரன்னில் ரன் அவுட்டாக 15.3 ஓவரிலேயே, பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 111 ரன் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா தரப்பில், ஹர்சித் ராணா 3, வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
112 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் டி காக் 2 ரன்னிலும், சுனில் நரைன் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த கேப்டன் ரகானே, ரகுவன்ஷி நிதனாமாக ஆடிய ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 55 ரன் சேர்த்த நிலையில் ரகானே 17 ரன்னிலும், ரகுவன்ஷி 37 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அடுத்த வந்த வெங்கடேஷ் ஐயர் 7 ரன், ரிங்கு சிங் 2 ரன், ரமன்தீப் சிங் 0, ஹர்ஷித் ராணா 3 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 12.5 ஓவரில் 79 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து கொல்கத்தா தடுமாறியது. சாஹல் வீசிய 14 ஓவரில் ரசல் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார்.
15 ஓவர் வீசிய அர்ஷதீப் சிங் ரன் எதுவும் கொடுக்காமல் வைபவ் அரோரா விக்கெட்டை எடுத்தார். 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 17 ஓவர் முதல் பந்தை ரசல் சந்தித்தார். யான்சன் வீசிய முதல் பந்தில் கிளின் போல்ட் ஆனார். இதனால் 15.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன் மட்டுமே எடுத்து 16 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. பஞ்சாப் அணி பந்து வீச்சில் சாஹல் 4, யான்சன் 3, விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குறைந்தபட்ச ஸ்கோரை டிஃபெண்ட் செய்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1,500 ரன்கள்: சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்!
சனி 3, மே 2025 4:13:27 PM (IST)

குஜராத் அபார வெற்றி: வெளியேறியது ஹைதராபாத்!!
சனி 3, மே 2025 10:47:47 AM (IST)

தொடர்ச்சியாக 6 வெற்றிகள் : முதலிடத்துக்கு முன்னேறியது மும்பை
வெள்ளி 2, மே 2025 12:45:12 PM (IST)

ஸ்ரேயாஸ் அதிரடியில் சிஎஸ்கே தோல்வி : பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது!
வியாழன் 1, மே 2025 11:06:05 AM (IST)

டெல்லி அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் : ஆகாஷ் சோப்ரா
புதன் 30, ஏப்ரல் 2025 4:56:41 PM (IST)

மிக இளம் வயதில் சதம்: வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:06:34 AM (IST)
