» சினிமா » செய்திகள்

டி20 உலகக் கோப்பைக்கு அனிருத் இசையில் புதிய பாடல்!

சனி 24, ஜனவரி 2026 3:21:08 PM (IST)


இந்தியா, இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான புதிய பாடலை உருவாக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கையில் நடைபெறும் இந்தப் போட்டிகள் அடுத்த மாதம் பிப்.7ஆம் தேதி தொடங்குகின்றன.தனுஷின் 3 படத்தில் அறிமுகமான அனிருத் (35 வயது) தமிழின் முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தியிலும் இசையமைத்து பான் இந்திய இசையமைப்பாளராக மாறியுள்ளார்.

அனிருத் இசையில் அடுத்ததாக ஜன நாயகன், எல்ஐகே, ஜெயிலர் 2, டிசி, தி கிங், அரசன் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில், இந்தியா, இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான புதிய பாடலை உருவாக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விடியோவை அனிருத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

கிரிக்கெட் சாதாரணமான போட்டி மட்டுமே கிடையாது. அது ஒரு உணர்வு. ஐசிசியின் ஆடவர் டி20 உலகக் கோப்பையில் பங்கு வகிப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். 20 நாடுகள், ஒரே சப்தம், நிஜமான த்ரில்லர் உடன் ஆட்டத்தைப் பார்க்கலாம். ஐசிசி உலகக் கோப்பைக்கான அதிகாரபூர்வ பாடல் விரைவில் வரும் என்றார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory