» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மிக்ஜம் புயல் எச்சரிக்கை: நாடு முழுவதும் 142 ரயில்கள் ரத்து!

சனி 2, டிசம்பர் 2023 5:48:00 PM (IST)

மிக்ஜம் புயல் எதிரொலியாக நாடு முழுவதும் நாளை முதல் 7 ஆம் தேதி வரை 142 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் வரும் 4-ம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக நாடு முழுவதும் 142 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை முதல் 7 ஆம் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory