» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தி மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்.பி செந்தில் குமார் மன்னிப்பு கேட்டார்!
புதன் 6, டிசம்பர் 2023 4:03:30 PM (IST)
இந்தி பேசும் மாநிலங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்த திமுக எம்பி செந்தில் குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.

அப்போது மக்களவையில் பேசிய திமுக எம்.பி செந்தில்குமார், "யூனியன் பிரதேசங்கள் தங்களை மாநிலமாக்க எதிர்பார்ப்பதுதான் வழக்கம். ஆனால், முதல் முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாகியிருக்கிறது. பாஜக பல மாநிலத் தேர்தல்களில் வென்றிருக்கிறது. எப்போது அவர்களால் வெல்ல முடியவில்லையோ அந்த மாநிலத்தை அவர்கள் யூனியன் பிரதேசமாக்கிவிடுகிறார்கள். அங்கே கவர்னர்கள் மூலம் ஆட்சி நடத்துகிறார்கள்.
பசு கோமிய (கோ மூத்ரா) மாநிலங்கள் என்று நாம் பொதுவாக அழைக்கும் இந்தி பேசும் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுகிறது. இதுவே பாஜகவின் பலம். ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தலில் அந்தக் கட்சியால் வெற்றி பெற முடிவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
செந்தில் குமாரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. செந்தில் குமாரின் இந்த பேச்சை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரும் கண்டித்துள்ளனர். திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான ஸ்டாலினும் எம்.பி செந்தில்குமாரை கண்டித்து, அவரது கருத்தை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் தமது பேச்சுக்கு திமுக எம்.பி செந்தில்குமார் வருத்தமும் மன்னிப்பும் கேட்டு எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செந்தில் குமார் பதிவிட்டுள்ளதாவது: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை. அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் வலுவான பதிலடி கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி
ஞாயிறு 11, மே 2025 9:29:29 PM (IST)

குடியரசுத் தலைவர் முர்முவின் சபரிமலை பயணம் ரத்து: பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி!!
சனி 10, மே 2025 4:56:04 PM (IST)

காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்!
சனி 10, மே 2025 3:47:49 PM (IST)

எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகள் முறியடிப்பு: இந்திய ராணுவம் அதிரடி
சனி 10, மே 2025 11:18:54 AM (IST)

முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை!
சனி 10, மே 2025 8:47:45 AM (IST)

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிப்பு : உமர் அப்துல்லா
வெள்ளி 9, மே 2025 5:52:30 PM (IST)
