» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பிலான திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
திங்கள் 9, மார்ச் 2026 10:45:17 AM (IST)

டெல்லி யூனியன் பிரதேசத்தில் ரூ.33,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
நாட்டின் முதல் வட்ட மெட்ரோ பாதை (Ring Metro) திட்டத்தின் கீழ், மஜ்லிஸ் பார்க் - பாபர்பூர் மற்றும் தீபாளி சவுக் - மஜ்லிஸ் பார்க் இடையேயான புதிய வழித்தடங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார். சரோஜினி நகர் மற்றும் நேதாஜி நகர் பகுதிகளில் ரூ.15,200 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 9,350 அடுக்குமாடி குடியிருப்புகளை அவர் திறந்து வைத்தார்.
டெல்லி மெட்ரோ 375 கி.மீ. ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், 1,800 மின்சார பேருந்துகள் மற்றும் நமோ பாரத் ரயில் சேவைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், இந்தியாவில் 3 கோடி 'லட்சாதிபதி பெண்களை' உருவாக்குவதே இலக்கு என்றார். இரட்டை இன்ஜின்" அரசால் டெல்லியின் உள்கட்டமைப்பு சர்வதேசத் தரத்திற்கு உயர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்சய் குமார் மகளுக்கு ஆன்லைன் கேமில் பாலியல் தொல்லை: மர்ம ஆசாமி கைது!
சனி 25, ஏப்ரல் 2026 5:35:24 PM (IST)

யமுனையில் படகு சவாரி செய்ய உங்களுக்கு இருக்கிறதா? பிரதமருக்கு மமதா சவால்!
சனி 25, ஏப்ரல் 2026 3:58:40 PM (IST)

நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு: நாடு முழுவதும் 28 லட்சம் பேர் எழுதுகிறார்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 12:41:13 PM (IST)

மசூதிகளுக்கு பெண்கள் செல்ல தடையில்லை: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்!
சனி 25, ஏப்ரல் 2026 11:01:50 AM (IST)

பீகாரில் முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!
சனி 25, ஏப்ரல் 2026 10:49:21 AM (IST)

சபரிமலை சன்னிதானம் மீது தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர்: கடலோர காவல் படை விளக்கம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:49:17 PM (IST)


IndianMar 9, 2026 - 05:00:26 PM | Posted IP 162.1*****