» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக துரை. இரவிச்சந்திரன் பொறுப்பேற்பு
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 10:04:57 AM (IST)

தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக துரை. இரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார் .
தென்காசி மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர். இவர் எம்.எஸ்சி., எம்.பில். பட்டதாரி. சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர். கடந்த 2003-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று சிவகங்கை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் துணை ஆட்சியராக பணியாற்றியுள்ளார். தூத்துக்குடி, கோவை, நாமக்கல் மாவட்டங்களில் வருவாய் அலுவலராக பணியாற்றியுள்ளார்.
பின்னர் 2015-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயர்வு பெற்று, கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை துணை செயலாளராகவும், பின்னர் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இதன் பிறகு மாநில சிறுபான்மை நல ஆணையத்தில் உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்தார். அங்கிருந்து தென்காசி மாவட்ட ஆட்சியராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அனைத்து துறை உயர் அதிகாரிகள், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)

செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:23:45 AM (IST)

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா... பாட்டு பாடி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்!
சனி 4, ஏப்ரல் 2026 10:44:09 AM (IST)

பேருந்து மோதி நண்பர்கள் இருவர் உயிரிழப்பு: திருவிழாவிற்கு வந்த இடத்தில் சோகம்
சனி 4, ஏப்ரல் 2026 8:53:59 AM (IST)

கடன் கேட்ட நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது: குடிபோதையில் வெறிச்செயல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:47:35 AM (IST)

நெல்லையில் 100 அடி நீளத் துணியில் தேர்தல் ஓவியம்: மாணவ, மாணவிகள் அசத்தல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:16:59 PM (IST)

