» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசியில் 11ம் தேதி எரிவாயு நுகர்வோர் கூட்டம்
வியாழன் 7, டிசம்பர் 2023 5:25:26 PM (IST)
தென்காசியில் வரும் 11ம் தேதி எரிவாயு நுகர்வோர் கூட்டம் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் மெத்தனப்போக்கு அல்லது முறைகேடுகள், எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம், முறைகேடுகள் குறி்த்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக
அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் கூட்டம் 11.12.2023 அன்று மாலை 4.00 மணியளவில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)

மீட்கப்பட்ட ஆட்டோவை ஒப்படைக்க லஞ்சம் கேட்டதாக புகார்: எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்
வியாழன் 11, செப்டம்பர் 2025 12:31:55 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 10, செப்டம்பர் 2025 4:50:46 PM (IST)
