» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி : உயர் நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 12:14:09 PM (IST)

திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. 

திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவில் உண்மையை மறைத்து வேட்புமனுவை தாக்கல் செய்ததாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது, இவ்வழக்கு தாமதமாக தொடுக்கப்பட்டுள்ளது, தேர்தல் நிறைவடைந்த பின்னர் மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம்" என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில்,  நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory