» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு பள்ளியில் ரூ.78.24 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்!
வெள்ளி 8, நவம்பர் 2024 4:21:25 PM (IST)

வன்னிகோனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.78.24 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூடம் கட்டடத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக பள்ளி கல்வித்துறையின் சார்பில் மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வன்னிகோனேந்தல் அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.78.24 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை 1 ஆய்வுக்கூடம் கட்டடத்தை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசுகையில், "அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணைய வசதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட இல்லம் தேடி கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துதல், பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
வன்னிகோனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.78.24 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் இரண்டு வகுப்பறைகள் மற்றும் ஒரு ஆய்வகம் என மொத்தம் 294.50 ச.மீ (3170 சதுர அடி) பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு இன்றையதினம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரக்கன்றுகளை நட்டு வைத்து, பசுமை மன்றம், உயர்கல்வி வழிகாட்டி மன்றம், போதை ஒழிப்பு மன்றம், சாலைப்பாதுகாப்பு மன்றம் போன்ற ஒவ்வொரு குழுவிலும் மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவியை மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வசந்தி வன்னிக்கோனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கணேசன் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)

மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:09:21 AM (IST)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)

கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:31:34 PM (IST)




