» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)
வள்ளியூர் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று மூதாட்டியை மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு ஆறுபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (70). இவரது கணவர் ஞானபிரகாசம் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் அன்னம்மாள் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்க சென்றார்.
அப்போது, வீட்டின் கதவை மர்மநபர்கள் தட்டினர். ஆனால் அவர் திறக்காததால், வீட்டின் ஜன்னலை உடைத்து 3 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அன்னம்மாளை மிரட்டி, அவர் காதில் அணிந்திருந்த 3 கிராம் தங்க கம்மல், ரூ.1,000 ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். நேற்று காலையில் அக்கம் பக்கத்தினருக்கு நடந்த சம்பவத்தை அன்னம்மாள் கூறினார்.
அவர்கள் உடனடியாக வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி மகளிர் அரபிக் கல்லூரியில் 11ஆவது பட்டமளிப்பு விழா
வியாழன் 29, ஜனவரி 2026 8:21:27 AM (IST)

திருநெல்வேலியில் 2480 தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கல்!
புதன் 28, ஜனவரி 2026 5:27:33 PM (IST)

கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றிச்சென்ற லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: டிரைவர் படுகாயம்
புதன் 28, ஜனவரி 2026 8:33:50 AM (IST)

மூதாட்டியை அடித்துக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
செவ்வாய் 27, ஜனவரி 2026 9:24:25 PM (IST)

கர்ப்பிணி பெண் மர்மசாவில் திடீர் திருப்பம்: கொலை செய்து நாடகமாடிய அரசு ஊழியர் கைது!
செவ்வாய் 27, ஜனவரி 2026 7:48:56 AM (IST)

கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவியில் குடியரசு தினவிழா கோலாகலம்
திங்கள் 26, ஜனவரி 2026 8:35:39 PM (IST)

