» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பள்ளி மாணவர் உடலை பெற்றுக்கொள்ள மறுப்பு: நீதிமன்ற உத்தரவின்பேரில் தகனம்!

புதன் 6, ஆகஸ்ட் 2025 8:40:26 PM (IST)

விடுதி கிணற்றில் நீரில் மூழ்கி இறந்த மாணவர் உடல் பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்துவிட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆர்.டீ.ஓ உத்தரவின் பேரில் உரிமை கோரப்படாத உடலாக கருதி எரியூட்டப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் CMS ஹாஸ்டலில் தங்கியிருந்து படித்த தென்காசி மாவட்டம் மாறாந்தை கிராமத்தைச் சார்ந்த மாணவர் ஒருவர், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கடந்த 08.07.2025 அன்று பணகுடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் புலன் விசாரணையில், 09.07.2025 அன்று சடலத்துக்கு பிரேத கூராய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னர் அவரது உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் எவரும் வாங்க வராததால், பிரேதகூறாய்வு செய்யப்பட்ட, மேற்படி மாணவரின் பிரேதமானது, TVMCH மருத்துவமனை பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இறந்துபோன மாணவனின் தந்தை அவர்கள், மாண்பமை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர, 18.07.2025 அன்று மாணவரின் பிரேத கூறாய்வு சம்பந்தமான வீடியோ பதிவுகளை மருத்துவ
மனையில் இருந்து வழங்கியதன் அடிப்படையிலும், காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையின் அறிக்கையை மாணவரின் தந்தைக்கு வழங்கியதன் அடிப்படையிலும், உடலை பெற்றுக் கொள்ள மனுதாரர் தரப்பில் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டு அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதன்படி, சடலத்தை பெற்றுக்கொள்ள, நீதி மன்ற உத்தரவினை மேற்கோள் காட்டி, காவல்துறையின் அறிவிப்பு மாணவரின் பெற்றோருக்கு வழங்க தென்காசி மாவட்டம் மாறந்தையில் உள்ள மாணவரின் வீட்டிற்கு சென்று மாணவரின் பெற்றோரிடம் வழங்க முயன்ற போது, அவர்கள் பெற்றுக்கொள்ள மறுத்ததால், காவல் உதவி ஆய்வாளர் அறிவிப்பை வீட்டு வாயிலில் கிராம உதவியாளர் முன்னிலையில் ஒட்டினார். மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவ அதிகாரி அவர்கள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில்,
பணகுடி காவல் நிலைய ஆய்வாளர், பிரேத கூராய்வு செய்யப்பட்ட உடலானது நீண்ட நாட்களாக மருத்துவமனையில் வைத்திருப்பதால், சுகாதார கேடு ஏற்படும் என்று மருத்துவ அதிகாரி அனுப்பிய கடிதத்தை மேற்கோள் காட்டி, அனுப்பிய பரிந்துரையின் அடிப்படையில், திருநெல்வேலி கோட்டாட்சியர் (RDO) 02.08.2025 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, மாணவரின் பெற்றோர் 04.08.2025 மதியம் 12 மணிக்குள் சடலத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும், பெறப்படாவிடில், அது உரிமை கோரப்படாத உடலாக கருதப்பட்டு தகனம் செய்யப்படும் என அறிவுறுத்தினார். 

இந்த உத்தரவும், நேரில் சார்பு செய்ய சென்றபோது , பெற மறுத்ததால், மாணவரின் மாறந்தை (ஆலங்குளம் PS எல்லை) வீட்டில் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் காவல் துறையினரால் ஒட்டப்பட்டது. மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

04.08.2025 அன்று, உயர்நீதிமன்ற உத்தரவு, மருத்துவ அலுவலரின் அறிக்கை, காவல் ஆய்வாளரின் அறிக்கை , பொதுநல சிந்தனை மற்றும் 
 சுகாதார பாதுகாப்பின் அடிப்படையில், RDO/திருநெல்வேலி மாணவரின் உடலை உரிமை கோரப்படாத உடலாக அறிவித்து, அதை திருநெல்வேலி மாநகராட்சி மயானத்தில், இந்து முறைப்படி தகனம் செய்ய உத்தரவிட்டார்.

மேற்படி உத்தரவானது, மாணவரின் பெற்றோரிடம் சார்பு செய்ய சென்றபோது அவர்கள் மீண்டும் மறுத்ததால், 05.08.2025 அன்று அவர்களது வீட்டின் வாயிலில் கிராம நிர்வாக அதிகாரியின் முன்னிலையில் ஒட்டப்பட்டது. மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றைய தினம் (06.08.2025), அனைத்து நியமநெறிகள் பின்பற்றி, மருத்துவமனையிலிருந்து மாணவரின் உடல் பெறப்பட்டு, திருநெல்வேலி மாநகராட்சி மின்தகனசாலையில் வருவாய் மற்றும் காவல் துறையின் மேற்பார்வையில் இந்து சமய முறைப்படி எரியூட்டப்பட்டது.மாணவரின் உடல் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, முறைப்படி அறிவிப்பானை வழங்கப்பட்டு, முறையான வழிமுறைகளை பின்பற்றி , பிரேதம் எரியூட்டப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory