» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்!

சனி 25, அக்டோபர் 2025 4:18:40 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 27ஆம் தேதி முதல் நவ.1ஆம் தேதி வரை விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது..

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு தேசிய விட்டமின் ஏ சத்துக் குறைபாடு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நமது மாவட்டத்தில் 27.10.2025 முதல் 01.11.2025 வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 6 வயது வரை சுமார் 1,07,537 இலட்சம் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.

விட்டமின் ஏ சத்து 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றும் புத்தி கூர்மைக்கு மிகவும் இன்றியமையாத நுண்சத்து ஆகும். மேலும் விட்டமின் ஏ சத்து, கண் குருடு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். குடல், சிறுநீர்,சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க விட்டமின் ஏ நுண்சத்து உதவுகிறது.

விட்டமின் ஏ திரவம் வழங்குவதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது இத்திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மில்லி அளவும் 12 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மில்லி அளவும் வழங்கப்பட உள்ளது. பொது மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் கொடுத்து பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory