» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி விற்பனை : ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்!
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 12:14:37 PM (IST)

திருநெல்வேலியில் 11-வது தேசிய கைத்தறி தினத்தினையொட்டி நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சி விற்பனையை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்து, நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (07.08.2025) 11-வது தேசிய கைத்தறி தினத்தினையொட்டி நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சி விற்பனையை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 75 வயதைக் கடந்தும் நெசவுத் தொழில் செய்து வரும் 3 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் கௌரவித்தார்.
தொடர்ந்து, நெசவாளர் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மான்யம் மற்றும் வட்டி மான்யத்துடன் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் 7 உறுப்பினர்களுக்கு கடன் தொகையாக ரூ.6 இலட்சமும், நெசவாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 11 நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளும் மற்றும் கைத்தறி குழுமத் திட்டத்தின் கீழ் 5 நெசவாளர்களுக்கு தறி உபகரணங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி சரக கைத்தறி உதவி இயக்குநர் ஆரோக்கியராஜ் , கைத்தறி அலுவலர் செண்பகராஜ் மற்றும் கைத்தறி துறை அலுவலகப் பணியாளர்கள், நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் திருட்டு வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 12:02:33 PM (IST)

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 8:52:50 AM (IST)

திருநெல்வேலியில் 23ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 4:20:21 PM (IST)

கவின் கொலை வழக்கு: சிபிசிஐடி காவலுக்கு சுர்ஜித், தந்தை சரவணன் தரப்பு எதிர்ப்பு
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 3:48:06 PM (IST)

மின் ஊழியரை தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 11:22:29 AM (IST)

பள்ளி மாணவர் உடலை பெற்றுக்கொள்ள மறுப்பு: நீதிமன்ற உத்தரவின்பேரில் தகனம்!
புதன் 6, ஆகஸ்ட் 2025 8:40:26 PM (IST)
