» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாராயம் குடித்ததைப் போல ஆடாதீர்கள்: ரசிகர்களுக்கு மாரி செல்வராஜ் அட்வைஸ்!

செவ்வாய் 21, அக்டோபர் 2025 3:39:28 PM (IST)



தயவு செய்து சாராயம் குடித்ததைப் போல ஆடாதீர்கள். நான் உனக்கு சாராயம் கொடுக்கவில்லை. நான் உனக்கு கொடுத்தது புத்தகம் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘பைசன் காளமாடன்’. இதில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். பசுபதி, ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த அக்டோபர் 17 திரையரங்குகளில் வெளியானது.

திருநெல்வேலியில் இந்த படம் ஓடும் ஒரு திரையரங்குங்கு துருவ் விக்ரம், அனுபாமா உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர் மாரி செல்வராஜ் விசிட் அடித்தார். அப்போது படக்குழு பேசிக் கொண்டிருந்தபோது படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலரும் ஆடிக் கொண்டும், விசிலடித்தும் ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். இதனைக் கண்ட மாரி செல்வராஜ் மைக்கில் அவர்களுக்கு கண்டிப்பான முறையில் அறிவுரை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், "நான் உனக்கு சாராயம் கொடுக்கவில்லை. நான் உனக்கு கொடுத்தது புத்தகம். என்னுடைய சினிமாவை நீ புத்தகமாக படிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். உனக்கு சாராயம் கொடுத்து ஆடவைப்பதற்காக நான் இங்கு வரவில்லை. தயவு செய்து சாராயம் குடித்ததைப் போல ஆடாதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள். ஒவ்வொரு படம் வரும்போது இந்த மாரி செல்வராஜை உங்கள் சொந்த அண்ணனாக தம்பியாக நினைத்து பார்க்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory