» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் : வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 3:28:28 PM (IST)
பள்ளிச் சிறுமியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் கீழ ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (26). இவர் கடந்த 2019-ம் ஆண்டு புளியங்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தார். அப்போது, வாசுதேவநல்லூர் கங்கை அம்மன் கோவில் மேலத் தெருவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் பேருந்து பயணத்தின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த 15.03.2019 அன்று தேர்வு எழுதிவிட்டு திரும்பிய சிறுமியை, பாண்டி ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். சங்கரன்கோவில் வழியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் வைத்து சிறுமிக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்டியுள்ளார். பின்னர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமி மாயமானது குறித்து அவரது தந்தை பால்ராஜ் அளித்த புகாரின் பேரில், வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாண்டி சிறுமியைக் கடத்திச் சென்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத் தீர்ப்பு: இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி பி. ராஜவேல், குற்றம் சாட்டப்பட்ட பாண்டிக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.11,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் குட்டி (எ) மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)

இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரத்த தானம் செய்ய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 29, ஜூலை 2026 12:47:15 PM (IST)

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 29, ஜூலை 2026 8:32:40 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் மாணவிகள் கண்ணீர் : இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!
செவ்வாய் 28, ஜூலை 2026 3:52:31 PM (IST)


