» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:31:34 PM (IST)
கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட காவல்கிணறு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் நாகராஜன் (வயது 42) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் கவனத்திற்கு வந்தது.
இதனையடுத்து அவர் மேற்சொன்ன நபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவின்பேரில், நாகராஜன் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:13:41 AM (IST)

பொருநை அருங்காட்சியகம்: நிதிஅமைச்சருக்கு சென்னை வாழ் நெல்லை மக்கள் பாராட்டு
வெள்ளி 2, ஜனவரி 2026 8:30:06 AM (IST)

தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டம்: டிஐஜி சரவணன் உறுதி!
வெள்ளி 2, ஜனவரி 2026 8:24:46 AM (IST)

நெல்லை, குமரி மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா : தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது!
வியாழன் 1, ஜனவரி 2026 12:35:05 PM (IST)

அரசுப் பேருந்துகளுக்கு பாஸ்டேக்கில் தேவையான இருப்பு உள்ளது : பொதுமேலாளர் தகவல்
புதன் 31, டிசம்பர் 2025 4:06:18 PM (IST)

நெல்லை சரக புதிய டிஐஜியாக சரவணன் நியமனம்!
புதன் 31, டிசம்பர் 2025 12:19:33 PM (IST)


