» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்வு!
சனி 22, நவம்பர் 2025 10:08:40 AM (IST)

இருதயகுளம், அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பள்ளித் தலைமை ஆசிரியை அருள் சகோதரி சூ. அருள்மேரி தலைமை வகித்தார். பள்ளி மாணவிகள் 1600 பேர் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் விதைப் பந்துகள் தயாரித்து சாதனை படைத்தனர். வெங்கடாம்பட்டி சமூக ஆர்வலர் திருமாறன் கலந்து கொண்டு விதைப்பந்துகள் தயாரிப்பதன் அவசியம் குறித்து விளக்கிப்பேசினார்.
ஆசிரிய அருள் சகோதரிகள் ஜோசப் செல்வி, ஜான்சி, பிரசீலா, கிளாரா மேரி, மரிய மல்லிகா, ஜான்சி, ரீட்டா புஷ்பம், மற்றும் அருள் ராஜ துரைச்சி ஆகியோர் மாணவிகளுக்கு விதைப்பந்துகளை செய்து காட்டினர். விதைப்பந்து தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியை அருள் சகோதரி சூ. அருள் மேரி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மரிய இனிகோ மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
புதன் 7, ஜனவரி 2026 4:23:14 PM (IST)

ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
புதன் 7, ஜனவரி 2026 11:08:37 AM (IST)

மாணவி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு: அரசு கல்லூரி பெண் முதல்வர்,கணவருடன் கைது
புதன் 7, ஜனவரி 2026 8:09:34 AM (IST)

சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் கண்காட்சி அரங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:53:57 PM (IST)

திமுக அரசை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: நெல்லையில் 401 பேர் கைது!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:47:24 PM (IST)

சிறுமியை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 8:35:18 AM (IST)

