» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிநாள் வசூல்: ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 3:46:25 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிநாள் வசூலினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09.12.2025) நடைபெற்ற படைவீரர் கொடிநாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், கொடிநாள் வசூலினை தொடங்கி வைத்து, முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவிக்கையில்: நமது நாட்டின் முப்படையையும் சார்ந்த இராணுவ வீரர்களின் தன்னலமற்ற சேவையை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படைவீரர் கொடிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. நமது நாட்டை பல்வேறு அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதில் படைவீரர்கள் ஆற்றிவரும் தன்னலமற்ற சேவையை நன்றியுடன் இந்நாளில் நினைவு கூர்கிறோம்.
நாமெல்லாம் ஒரு பாதுகாப்பான சூழலில் அமைதியாகவும் இருக்கிறோம் என்றால் அதற்கு பல்லாயிரம் படைவீரர்கள் தங்கள் வாழ்நாளை நமக்காக அர்பணித்து நமக்காக பாதுகாத்துவரும் இராணுவ வீரர்களுக்கு நாம் நன்றி புகழ வேண்டும். எத்தனையோ பேர்களின் உயிர் தியாகத்தால் நாம் இன்று பாதுகாப்பாகவும் ஒரு புதிய வளர்ச்சியை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறோம்.
படைவீரர்களின் செயல்பாடு என்பது போர்காலங்களில் மட்டும் போர் புரிவது அல்ல. போர் வராமல் தடுக்கும் செயலையும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமலும் பாதுகாத்து வருகின்றனர். அவர்களின் பொன்னான காலத்தையும், வாழ்க்கையையும் நமக்காக செலவிட்டு வருகின்றனர். சிறப்பாக செயல்பட்டு நம்மை பாதுகாத்து வருவதால் நாம் எந்தவித பதட்டமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.
படைவீரர்கள், பாதுகாப்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் போன்ற பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் தினம்தினம் எந்தனையோ பெரிய பிரச்சனைகள் நடக்காமல் தடுத்து வருகிறார்கள். இப்பணிகளில் பல்வேறு படைவீர்களும் உயிரிழந்ததோடு, பல்வேறு படைவீரர்கள் ஊனமுற்ற சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது.
எனவே அவர்களின் தியாகங்களை உணந்து நாம் எப்போதும் நன்றி கடன்பட்டவர்களாகவும், நம்மால் இயன்ற அளவிற்கு கொடிநாள் வசூல் வழங்கி அவர்களுக்கு உதவிகரனாக இருப்போம். இக்கொடி நாள் வசூல் நிதியானது போரில் ஊனமுற்றவர்கள்/உயிர்நீத்த படைவீரர்களின் கைம்பெண்கள், முன்னாள் இராணுவத்தினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொடிநாள் வசூலில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.99,68,098/- மாவட்ட வசூலும் ரூ.10,08,002/- மாநகராட்சி வசூலும் என கொடிநாள் வசூல் தொகை மொத்தம் ரூ.1.09 கோடி பெறப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 4000 முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 2025-ஆம் ஆண்டில் மட்டும் 246 பயனாளிகளுக்கு ரூ.1,54,94,348/- மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், வழங்கப்பட்டுள்ளது. மேலும், இன்றையதினம் 10 பயனாளிகளுக்கு ரூ.6,22,675/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்ந்தோர்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் கொடிநாள் நிதியிலிருந்து வழங்கப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் இராணுவ வீரர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தங்களால் இயன்ற வரையில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.பொ.கேரேனாப்புக் லிதியா, திருநெல்வேலி முப்படை வாரியம் உப தலைவர் குரூப் கேப்டன் ஜெ.ஐ.ஜேசன், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் மேஜர் P.அருள் அஸ்வின் (ஓய்வு), முன்னாள் படைவீரர் நலன் கண்காணிப்பாளர் சங்கரசுப்பிரமணியன், ECHS பாலிகிளினிக் அலுவலர் கமாண்டர் சௌந்தர பாண்டியன், எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் கோல்டன் பாம் கேன்டின் கர்னல் கர்னல் ஆல்வின், கர்னல் செல்லப்பா, உட்பட அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!
புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)

அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை: கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை!
புதன் 10, டிசம்பர் 2025 8:42:41 AM (IST)

நெல்லை அருகே பைக் விபத்தில் கல்லூரி மாணவி பலி - உறவினர் படுகாயம்!
புதன் 10, டிசம்பர் 2025 8:24:47 AM (IST)

தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி விபத்து: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 7:42:11 AM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: டிச.20ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:07:19 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள்: டிச.23க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:00:22 PM (IST)


