» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள்: டிச.23க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:00:22 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் குழந்தை உதவி மையத்தின் மேற்பார்வையாளர் மற்றும் வழக்குப்பணியாளர் பணியிடங்களை ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் குழந்தை உதவி மையத்தின் மேற்பார்வையாளர் – 3 பணியிடம் மற்றும் வழக்குப்பணியாளர் – 3 பணியிடம் ஆகிய பணியிடங்களை ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் கீழ்க்காணும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.பதவி:– மேற்பார்வையாளர் (காலிப்பணியிடம் – 3)
வயது வரம்பு:- 42 வயது அல்லது 42 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (01.12.2025 அன்று). அவசர உதவி சேவையில்முன்னதாகவே பணிபுரிந்தவராக இருந்தால் 52 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:- சமூகப்பணி / கணினி அறிவியல் / தகவல் தொழில் நுட்பம் / சமுதாய சமூகவியல் / சமூக அறிவியல் ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட இளங்கலைப்பட்டம், பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
மேலும் கணினி அறிவு உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
அவசர உதவி மையங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.
மாத தொகுப்பூதியம்:– 21,000/-
2.பதவி:– வழக்குப்பணியாளர் (காலிப்பணியிடம்: 3)
வயது வரம்பு:- 42 வயது அல்லது 42 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (01.12.2025 அன்று). அவசர உதவி சேவையில்முன்னதாகவே பணிபுரிந்தவராக இருந்தால் 52 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.கல்வித்தகுதி:- அங்கீகரிக்கப்பட்ட / அதற்கு சமமான மையத்திலிருந்து 12-ம் வகுப்பு தேர்ச்சி, சிறப்பான தகவல் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை. அவசர உதவி மையங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.மாத தொகுப்பூதியம்:– 18,000/-
இந்த ஒப்பந்த பணியானது முற்றிலும் தற்காலிகமானது. பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஒருவருடம் வரை நடப்பில் இருக்கும். மாத தொகுப்பூதியம் தவிர வேறு எந்த படியும் பெற தகுதியில்லை. அரசிடமிருந்து ஆணை கிடைக்கப் பெற்ற பின்னரே தொகுப்பூதியம் வழங்கப்படும். ஒரு மாத பணி நாட்கள் முடிவுற்ற பின்னர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படும் இப்பணியாளர், அரசுப்பணி என உரிமை கோர தகுதியில்லை. இந்த ஒப்பந்தமானது எந்தவித முன்னறிவிப்போ, காரணமோ இன்றி எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம்.
இதற்கான விண்ணப்படிவத்தை https://tirunelveli.nic.in என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் பூர்த்தி செய்து 23.12.2025 அன்றுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியரகம், கொக்கிரகுளம், திருநெல்வேலி -9 தொலைபேசி எண்.0462-2901953 முகவரியில் கிடைக்கபெறுமாறு விண்ணப்பிக்கலாம். குறித்த தேதிக்கு பின்னர் தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!
புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)

அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை: கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை!
புதன் 10, டிசம்பர் 2025 8:42:41 AM (IST)

நெல்லை அருகே பைக் விபத்தில் கல்லூரி மாணவி பலி - உறவினர் படுகாயம்!
புதன் 10, டிசம்பர் 2025 8:24:47 AM (IST)

தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி விபத்து: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 7:42:11 AM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: டிச.20ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:07:19 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிநாள் வசூல்: ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 3:46:25 PM (IST)


