» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி விபத்து: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 7:42:11 AM (IST)

நெல்லை மாவட்டம், பணகுடி நான்கு வழிச்சாலையில், தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த, லாரி விபத்துக்குள்ளானதில் மூன்று மணி நேரம் முற்றிலுமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து, நிலக்கரி ஏற்றிக்கொண்டு, கேரள மாநிலம் கொல்லத்திற்கு லாரி ஒன்று சென்று, நேற்று (டிசம்பர்.9) அதிகாலையில், கொண்டிருந்தது. அப்போது திருநெல்வேலி- கன்னியாகுமரி தேசிய, நான்குவழி நெடுஞ்சாலையில், பணகுடி அருகே இந்த லாரி வரும்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது, பயங்கர சத்தத்துடன் மோதியது.
இதில், மோதிய லாரியின் முன்பக்க சக்கரங்கள் கழன்று தேசிய நான்கு வழிச்சாலையில், உருண்டோடியது. அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் சிறுசிறு காயங்களுடன், உயிர் தப்பினார். விபத்தை நேரில் பார்த்த, நான்கு வழிச்சாலை காப்பாளர்கள் ஓடி வந்து, சிறிய வகை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், நிலக்கரியை மற்றொரு லாரிக்கு மாற்றினர். இந்த சம்பவத்தால், திருநெல்வேலி- கன்னியாகுமரி தேசிய, நான்குவழி நெடுஞ்சாலையில் போக்குவரத்து, தொடர்ந்து 3 மணிநேரம் கடுமையாக, பாதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவியில் குடியரசு தினவிழா கோலாகலம்
திங்கள் 26, ஜனவரி 2026 8:35:39 PM (IST)

திருநெல்வேலியில் குடியரசு தின விழா கோலாகலம் : ஆட்சியர் சுகுமார் தேசிய கொடி ஏற்றினார்!
திங்கள் 26, ஜனவரி 2026 12:06:10 PM (IST)

புலிகள் கணக்கெடுப்புப் பணி நிறைவு : சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சனி 24, ஜனவரி 2026 5:23:08 PM (IST)

திருப்புடைமருதூர் நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்!
சனி 24, ஜனவரி 2026 10:35:09 AM (IST)

திருநெல்வேலியில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் தொடங்கியது
வியாழன் 22, ஜனவரி 2026 5:39:39 PM (IST)

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா 24ஆம் தேதி தொடங்குகிறது!
வியாழன் 22, ஜனவரி 2026 3:56:16 PM (IST)

