» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே பைக் விபத்தில் கல்லூரி மாணவி பலி - உறவினர் படுகாயம்!

புதன் 10, டிசம்பர் 2025 8:24:47 AM (IST)

நெல்லை அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால் பைக் விபத்து ஏற்பட்டு கல்லூரி மாணவி உயிரிழந்தார். அவரது உறவினர் படுகாயம் அடைந்தார். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகள் விஜி முத்துக்கனி (18). இவர் ஆலங்குளத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று காலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வாங்குவதற்காக, தனது உறவினரான ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சொக்கலிங்கம் (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பின்னர் அவர்கள் மதியம் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆலங்குளத்துக்கு புறப்பட்டு சென்றனர். நெல்ைல அருகே சீதபற்பநல்லூரை கடந்து சென்றபோது, முன்னால் சென்ற லாரியை சொக்கலிங்கம் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது சாலையின் குறுக்காக திடீரென்று மாடு சென்றது. எனவே. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக சொக்கலிங்கம் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார்.

அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி லாரியின் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட விஜி முத்துக்கனியின் தலையில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சொக்கலிங்கம் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து சீதபற்பநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த சொக்கலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த விஜி முத்துக்கனியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory