» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 1,500 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்: 23ஆம் தேதி தொடக்க விழா

சனி 21, பிப்ரவரி 2026 8:45:48 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பல்வேறு புதிய திட்டப்ப ணிகளுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா வருகிற 23ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக வளாகத்தில் வருகிற 23ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்குத் இவ்விழா நடைபெறுகிறது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்டு, ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சி. கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்தை அமைச்சர்  திறந்து வைக்கிறார். 8 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் 5 மெகாவாட் திறன் கொண்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (Battery Energy Storage System) ஆகியவற்றுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.

பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளும் இதில் அடங்கும். இந்த விழாவில் மக்கள் பிரதிநிதிகள், மத்திய மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளைத் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித் தலைமையிலான அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Feb 21, 2026 - 10:18:42 AM | Posted IP 162.1*****

பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் நிதியை தங்களுக்குத் தாங்களே பயன்படுத்திக் கொள்ள சட்டத்தில் இடம் உள்ளதா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory