» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன பூங்கா அமைய ஆய்வு: கவுன்சிலர் கோரிக்கை ஏற்பு

சனி 21, பிப்ரவரி 2026 3:16:23 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி 34-வது வார்டு தேவகி நகர் சிறுவர் விளையாட்டு பூங்காவினை மாற்றுத்திறனாளிகள் பூங்காவாக மாற்றுவது தொடர்பாக கனிமொழி நேரில் ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 34-வது வார்டு தேவகி நகர் பகுதியில், பூங்கா அமைப்பதற்கான திட்டமானது, 34-வது வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பொதுமக்களின் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, இதற்கான இடத்தை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா, வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ் ஆகியோர் உடனிருந்தனர். மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக அதிநவீன உபகரணங்கள் மற்றும் நடைபயிற்சி தளங்களுடன் இந்த பூங்கா அமையவுள்ளது. பணிகள் நிறைவடைந்ததும் மக்கள் பயன்பாட்டிற்கு மிக விரைவில் இது கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory