» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் எரிவாயு இருப்பு நிலவரம் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆலோசனை!
வியாழன் 12, மார்ச் 2026 3:45:11 PM (IST)

எரிவாயு விநியோக நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோல் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் - மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் காணொளி வாயிலாக கூட்டம் நடத்தினார்
தற்போதைய சூழலில் எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை செயல்பாடுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய எரிவாயு விநியோக நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோல் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், காணொளி வாயிலாக இன்று (12.03.2026) கூட்டம் நடத்தி தங்கு தடையின்றி எரிவாயு விநியோகம் செய்யத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இலட்சத்து 13 ஆயிரத்து 97 வீட்டுச் சமையல் எரிவாயு இணைப்புகளும் 13 ஆயிரத்து 142 வணிக எரிவாயு இணைப்புகளும் உள்ளன. இதில் உணவகங்களுக்கு 6 ஆயிரத்து 309 இணைப்புகளும், தொழில் நிறுவனங்களுக்கு 49 இணைப்புகளும், சுகாதார துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்ந்த விடுதிகளுக்கு 1,026 இணைப்புகளும் மற்றும் இதர பயன்பாடுகளுக்கு 5 ஆயிரத்து 758 இணைப்புகளும் அடங்கும்.
மேலும், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் டீசல் இருப்பு 2337 கிலோ லிட்டர் மற்றும் பெட்ரோல் இருப்பு 1671 கிலோ லிட்டர் இருப்பு உள்ளது என எரிவாயு விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள எரிவாயு இருப்பு மற்றும் விநியோகம் தொடர்பான விவரங்களை அன்றாடம் தெரிவிக்க வேண்டுமெனவும், முக்கியமாக முதலமைச்சரின் காலை மற்றும் மதிய உணவுத் திட்டம், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் விடுதிகள், தொழிற்சாலை அருகில் அமைந்துள்ள உணவு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு தங்கு தடையின்றி எரிவாயு உருளை விநியோகம் செய்யுமாறு சம்பந்தபட்ட எரிவாயு நிறுவனங்கள் மற்றும் அரது துறை சார்ந்த அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் தட்டுப்பாடு ஏற்படும் நேர்வில் அது குறித்த தகவல்களை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 3 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: போக்சோ குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 8:30:53 PM (IST)

சிறுமியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் : வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 3:28:28 PM (IST)

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்
புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)

நெல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடி: எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனை!
புதன் 11, மார்ச் 2026 8:40:02 AM (IST)

துணை நடிகைக்கு காதல் தொல்லை கொடுத்த நெல்லை வாலிபர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:31 PM (IST)

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

